யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு - தொடரும் அட்டகாசம்



நேற்றிரவு இரவு கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த ஒருவரை யானை தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்துள்ளார்.

அண்மைய நாட்களில் காட்டு யானைகள் கல்முனையையும் அதனை அண்டிய பகுதிகளையும் அச்சுறுத்தி பொருள்சேதம் உயிர்சேதம் என்பவற்றை ஏற்படுத்தி வருகிறது.

காட்டு யானைகளின் நடமாட்டத்தை குறைப்பதற்கு உரிய அதிகாரிகள் முறையான நடைமுறையை கையிலெடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும் பொருள்சேதங்களும் உயிர்சேதங்களும் அதிகரித்தே செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
புதியது பழையவை