ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
குறித்த மாணவன், கண்டியிலுள்ள கடைகளில் தொலைபேசி பாகங்கள், உடற்கட்டு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் சில ஜோடி காலணிகளை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான மாணவன் கொள்வனவு செய்த பொருட்களை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 13ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.