மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!



இராணுவம் புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலின் அடிப்படையில், மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மணல்காட்டு பகுதிலேயே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை 104 கிலோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளானது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்திவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை