சர்வதேச அழகிப் போட்டியில் - முதலிடம் பிடித்த இலங்கை யுவதி



இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நஷனல் - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கையின் திலினி குமாரி நேற்று இரவு(16-09-2024) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி (09/09/2024)முதல் (16/09/2024) வரை நடைபெற்றது.

கட்டுநாயக்கவை வந்தடைந்த அழகி
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி, (16 /09/2024)இரவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பல்வேறு துறைகளில் திறமை
ஹனுவர, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
புதியது பழையவை