இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்



இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு  இந்திய (India)  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்.



இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் பின் தள்ளி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க  இன்று (23-09-2024) காலை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை