2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21-09-2024) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, 17,140,354 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.