இறுதித் தீர்மானத்தை வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி - உடன்பாட்டுக்கு சிறீதரன் மறுப்பு!



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

வவுனியாவில் இன்று (16-09-2024) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் தமது கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.



உடன்பாடு இல்லாத சிறீதரன்
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அந்தக் கருத்தில் தமக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் முன்வராத பின்னணியில் தமிழ் மக்களுக்காக நின்ற தமிழ் பொதுவேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதியது பழையவை