மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் விபத்து!



மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக இன்று(06-09-2024) பயணித்துக்கொண்டிருந்த காரும் மோட்டார்சைக்கிளும் செட்டிபாளையம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் செட்டிபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரும் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து செட்டிபாளையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே கட்டுப்பிள்ளையார் ஆலய வளைவுக்கு முன்னால் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை