நாகபாம்புக்கு முத்தமிட்ட இளைஞன் உ.யிரிழப்பு!



தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் சிவராஜ் என்ற 20 வயது நிரம்பிய பாம்பு பிடிக்கும் தொழிலாளி பல சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக அவரது தந்தை கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை