இலங்கை தமிழரசு கட்சி இரண்டாகப் பிளவு



வவுனியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குழு ஒன்று கூடி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என தீர்மானம் எடுத்திருந்தது தமது கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல என அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க கட்சியின் கூட்டம் கூடும் என்பது கூட தனக்கு தெரியாது என சேனாராதிராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக கருத முடியாது என சேனாதிராஜா தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பது கட்சியினால் எடுக்கப்பட்ட பொதுவான தீர்மானம் அல்ல என்றும், அது ஒரு சிலரால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட தீர்மானம் என்றும் சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

எஸ்.ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சி.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ நேசன் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
புதியது பழையவை