மட்டக்களப்பு கிரான்குளத்தில் விபத்து!






மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு முன்பாக பயணிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (03-09-2024)மதியம் பதிவாகியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணித்தோருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதிக வேகமே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.


புதியது பழையவை