யாழ்ப்பாணம் உணவகத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மீரான் சாய்பு முகமது மர்சூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காத்தான்குடியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமை புரிந்து வருகின்றார். இந்நிலையில் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்தவேளை நேற்றிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இவ்வாறு விழுந்தவர் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.