பழமையான திருநாவுக்கரசரின் சிலைக்கு சமூக விரோதிகளால் நேர்ந்த நிலை!




யாழ்ப்பாணத்தில் 20 வருடங்கள் பழமையான திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையானது சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
புதியது பழையவை