களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல், புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். வெல்கம 1984 மற்றும் 2000 க்கு இடையில் அகலவத்தை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்தார்.
வெல்கம 2007 முதல் 2010 வரை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், 2010 முதல் 2015 ஆரம்பம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார்.