பொதுத்தேர்தலுக்கான 21ஆயிரம் அஞ்சல் மூல வாக்குகள் நிராகரிப்பு!



2024 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் மொத்தம் 21,160 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


அண்மைய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 25,731 அஞ்சல் மூல வாக்குகள் இந்த தேர்தலில் அதிகரித்துள்ளதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை ஒக்டோபர்  26ஆம் திகதி முதல் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை