பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்




பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமிகளின் பட்டம் மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே குறித்த அனர்த்தம் நேர்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
புதியது பழையவை