மொனராகலை - வருணகம இராணுவ முகாம் ஒன்றின் மதிலை மோதித்தள்ளி இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்றிரவு ஒன்பதரை மணியளவில் மொனராகலை,வருணகம இராணுவ முகாம் அருகே நடைபெற்றுள்ளது
எதிர்த்திசையில் இருந்து வந்த பேருந்துக்கு வழிவிடும் நோக்கில் பாதையின் ஓரமாக திருப்பப்பட்ட லொறி ஒன்றும் கெப் ரக வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, இராணுவ முகாமின் மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது லொறி மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவ வாகனங்கள் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.