கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் வெடித்தது!



கொலன்னாவயில் உள்ள எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தற்போது அப்பகுதியில் பல இடங்களில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. 

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இன்று (30-10-2024) காலை 9.30 மணியளவில் குறித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 
 
இந்த குழாய் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எரிபொருள் குழாயைச் சுற்றியுள்ள பகுதியில் 33000 வாட் உயர் மின்அமைப்பு மற்றும் பல வீடுகள் உள்ளன.
 
கொழும்பு துறைமுகத்தில் இருந்து எரிபொருள் கொண்டு செல்லும் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள JET A1 விமானங்கள் பயன்படுத்தும் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட சேதத்தினால் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

 
தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எண்ணெய் பௌசர் மூலம் எரிபொருள் அகற்றப்பட்டு வருகிறது. தற்போது குழாயை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
புதியது பழையவை