திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கெப் வாகனத்துடன் மோதுண்டு இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாடு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (07-10-2024) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி கெப் ரக வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது , மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பட்டித்திடல் பகுதியில் வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட மாடுகளே வாகனத்துடன் மோதுண்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூதூர் போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.