ஒருவர் இரண்டு கட்சியில் வேட்பாளராக முடியுமா?



அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சியில் வேட்பாளராக முடியுமா என்பதை இலங்கையில் உள்ள பெண் வேட்பாளர் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல்கள் கையளிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறானவொரு நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த சட்டக்கல்லுாரி மாணவியான அந்தோணி டலிமா ஹலிஸ்ரா என்பவர் திடீரென இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாலன் தோழரும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
புதியது பழையவை