கம்பளை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று(23-10-2024) பிற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை ஒன்றுக்காக காரில் வருவதற்காக 20,000 ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கம்பளை பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.