மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று(09-10-2024)ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் சங்கு சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை  பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

சங்கு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்.......

1:-கோ.கருணாகரம் ஜனா- (மு. பா. உறுப்பினர்)

2:-துரைரெத்தினம்- (மு. கி. மா. சபை உறுப்பினர்)

3:-உதயகுமார்- மு.மட்டக்களப்பு அரச அதிபர்

4:-நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சி

5:-வசந்தராசா- சிறீலங்கா றெட் குறோஸ்

6:-தேவராஜன்- ஓய்வு அதிபர்

7:-ஜீ. மனோராதா- கலைப் பட்டதாரி( பெண்)

8:-வினாயகமூர்த்தி- ஆலய குருக்கள்







புதியது பழையவை