இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்



2024 ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்க பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.7% அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சம்பள செலவுகள் அதிகரிப்பிற்கான காரணம்
இதனால், கடந்த ஆண்டு (2023) முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு ரூ. 61,806.6 கோடி ஆகும். இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (2024) ரூ. 65,950.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த சம்பள செலவுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், ஜனவரி 2024 முதல் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 5000 ரூபாய் அதிகரிக்கப்பட்டமை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை