தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!







2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30-20-2024) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை