மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் -ஆசிரியர் கைது!




14 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது மேலதிக வகுப்புக்கு வருகை தந்த 14 வயது மாணவி ஒருவரைப் பல மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை