இலங்கையில்(sri lanka) சட்டத்தரணியாக பணியாற்றிய ஒருவர் சீ ஷெல்ஸ் நாட்டின் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி வின்சென்ட் பெரேரா என்பவரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டவராவார்.
அரச சபையில் நேற்று (16-10-2024) அவர் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்டத்துறையில் நிறைந்த அனுபவம்
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றியுள்ளார்.
மேலதிகமாக அவர் பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.
சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.