மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையில், நவராத்திரி விழா நேற்று(11-10-2024)ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேசசபை அலுவலகத்தில் உள்ள சரஸ்வதி சிலைக்கு விஷேட பூஜை இடம்பெற்று, மலர் மாலை அணிவிக்கப்பட்டு
வழிபாடுகள் இடம்பெற்றன.
பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் மற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.