மட்டக்களப்பு களுதாவளையில் மனைவி கொலை - தேடப்பட்டுவந்த கணவன் திருகோணமலையில் சடலமாக மீட்பு!





திருகோணமலையில் உள்ள இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமர தோட்டம் ஒன்றிலிருந்து நேற்றையதினம் (03-10-2024) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் சடலமாக மீட்கப்பட்டவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பெண் களுதாவளையில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையில் இருந்து தப்பித்து மூதூருக்கு வந்து தலைமறைவாக இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை