சாரதிகளுக்கு உறக்க நிலையை தணிக்க - கொத்தமல்லி தேநீர் வளங்கும் போக்குவரத்து பொலிஸார்!



விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தின் காரணமாக வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றார்கள்.

இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனவர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் விரயம் முன்பாக வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என வாகன சாரதிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
புதியது பழையவை