தேசிய டெங்கொழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம் !



இதனை முன்னிட்டு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவினால் ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் டெங்கொழிப்பு வார ஆரம்ப நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (24-10-2024)ஆம் திகதி  இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஆகியோரின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட டெங்கொழிப்பு வார நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உன்னிச்சை இராணுவ முகாம் இராணுவத்தினர், வாழச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, மீராவோடை பிரதேசத்தில் அரச திணைக்களங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வீடுகள், வணக்கஸ்தலங்கள் என்பன பார்வையிடப்பட்டது.

டெங்கு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் டெங்கு பரவக்கூடிய இடங்களை சுத்தப்படுத்த தவறும்பட்சத்தில் வழக்குத் தொடரப்படுமென எச்சரிக்கப்பட்டது.








புதியது பழையவை