நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை -டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கை!



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 38 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், 20 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை