இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இதேவேளை நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது, இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.