மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் - வீரகம்பம் வெட்டும் நிகழ்வு!



மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனின் சக்திவிழாவின் முக்கிய நிகழ்வான தீக்குழிக்கு நடப்படும் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு இன்று (13-20-2024) ஆம் திகதி இடம்பெற்றது .

பெரியபோரதீவில் இருந்து புறப்பட்ட அம்பாள் பழுகாமம் ஊடாக திக்கோடை கிராமத்தை அடைந்தது.

திக்கோடை - தும்பாலை எனும் காட்டுப்பகுதியில் வீரகம்பம் வெட்டும் வைபவம் மிகவும் பக்திபூர்வமாக இடம் பெற்றது.

வருகின்ற (15-10-2024)ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை நோர்பு கூற்றுதலும் பின் சக்திமகாயாகமும் அதனைத் தொடர்ந்து நோர்பு கட்டுதலும் தொடர்ந்து கடல்குளிப்பும் பின் மறுநாள் காலை(16-10-2024)ஆம் திகதி புதன் கிழமை அம்மனின் தீமிதிப்பு இடம் பெறும்.

பின் அம்மனின் வாளிபாடும் நிகழ்வுடன் இனிதே நிறைவுபெறும்.








புதியது பழையவை