மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் விபத்து!



மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஓந்தாச்சிமடம் பகுதியில் இன்று(13-20-2024)ஆம் திகதி  மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

மூன்றுபேர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த சகோதரரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்ற மூத்த சகோதரர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் பெரியபோரதீவு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த சிறுவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது 

மட்டக்களப்பு பெரியபோரதீவுப் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் களுவாஞ்சிகுடி நகருக்கு வருகை தந்திருந்த நிலையில் நகரில் நின்றிருந்த தனது நண்பனிடம் அவனது உயர்ரக மோட்டார்சைக்கிளை ஓடிப்பார்ப்பதற்காக வாங்கிக்கொண்டு அண்ணன் மோட்டார்சைக்கிளை வேகமாக செலுத்த தம்பி பின்னால் அமர்ந்து கொண்டு பயணித்த  நிலையில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதிய நிலையில் மோட்டர்சைக்கிள் பயணித்த சகோதரர்கள் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிவேகமாக மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றதாலே இவ் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து செல்கின்றனர்.
புதியது பழையவை