மட்டக்களப்பில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல்



இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. 

இதே வேலை இன்று(07-10-2024) மாவட்டத்தில் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு இன்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை சுயேட்சை குழு சார்பில் லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழு ஒன்று இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் 3 சுயேட்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார்.


புதியது பழையவை