மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி



தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய ஒற்றுமை
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர்.


இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை