அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் தனி நடிப்பு போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்துக்கும் துறைநீலாவணைக் கிராமத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாணவன் செல்வன் இராஜவரோதயன் வியூரேஷ் அவர்களை கௌரவிற்கின்ற நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு குழந்தைவேல் திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இன்று பாடசாலையில் இடம்பெற்றது.
இசை வாத்திய முழக்கங்களோடு பெற்றோர் சகிதம் மாணவன் பாடசாலை சமுகத்தினரால் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுதல் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு இந்நிகழ்வில் O/L பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற மூன்று மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.