மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க COOP Fresh பலசரக்கு விற்பனை நிலையத்தில் இன்று (28-10-2024)ஆம் திகதி பிற்பகல் 2.50 மணியளவில் சிறு தீ விபத்துச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது....
திடீரென்று ஏற்பட்ட மின் கசிவு காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குளிர்சாதனப் பெட்டியொன்று பாதிப்புக்குள்ளாகியது. குளிர்சாதன
பெட்டியின் பிளாஸ்டிக் எரிவினால் ஏற்பட்ட புகையினாலேயே பெரியளவினாலான பாதிப்பு போன்ற தோற்றப்பாடு தென்பட்டது.
அவசரமாக விரைந்து வந்த மின்சார சபையினர் மின்னினைப்பைத் துண்டித்து, சேதம் ஏற்படுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் ஸஹ்வி தெரிவித்தார்.