18 ஆம் திகதி புதிய அமைச்சரவை, இராஜாங்கம் இல்லை



அமையப் போகின்ற புதிய அரசாங்கத்தில் இராஜாங்க
அமைச்சர் போன்ற அமைச்சுப் பதவிகள் இருக்காது.
மாறாக 25 அமைச்சுக்களும்
25 உதவி அமைச்சுக்களும் மாத்திரமே இருக்கும் என
தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 21ஆம் தேதி பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவையை
அமைப்பதற்கான ஏற்பாடுகள்
நடைபெற்று வருகின்றன.

அதன் பின் புதிய பாராளுமன்ற பிரவேசத்துடன் புத்துணர்ச்சியுடன்
வளமான நாட்டை உருவாக்கும்
பணிகள் தொடரும் எனவும்
அவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலில் தெரிவித்தார்.
புதியது பழையவை