தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் - சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்.
கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும்.
தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி கீழ்தரமான அரசியலில் ஈடுப்பட்டுள்ளார்கள்.” என்றார்.