முல்லைத்தீவில் மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் நேற்றையதினம் (27.11.2024) முள்ளியவளை பகுதியில் சம்பவித்துள்ளது.
இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இவர் திருகோணமலை திரியாயை பிறப்பிடமாகவும் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.
மேலும், அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.