முதன்முதலாக வீரச்சாவை தழுவிய முஷ்லிம் போராளி மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன் இவருடைய இயக்கப்பெயர் ஜோண்சன் கொழும்பு பனாகொடை சிறையில் இருந்து தப்பியபோது இராணுவத்தால் சுடப்பட்டார் இவருக்கு லெப்டினட் பதவி நிலை வழங்கப்பட்டது.
1)ஜுனைதீன் ஓட்டமாவடி,இறப்பு: (லெப்டினட் ஜோண்சன்)30.11.1985,
2)லத்தீப் முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம் காத்தான்குடி, இறப்பு 24.12.1986,
3). நசீர் முகமட் நசீர் காங்கேயன்ஓடை, இறப்பு: 30.12.1987,
4). சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், இறப்பு 13.05.1988,
5). முகமது உசைதீன் ஓட்டமாவடி இறப்பு 05.08.1989,
6). ஆதம் எஸ்.எம்.ஆதம்பாவா சாய்ந்தமருது இறப்பு 03.01.1990,
7) அகமட் றியாஸ் மருதமுனை இறப்பு 04.05.1990,
8). கபூர் முகமதுஅலியார் முகமதுசலீம் காங்கேயன்ஓடை, இறப்பு 11.06.1990,
9) . தாகீர் முகைதீன்பாவா அன்சார் திருகோணமடு, பொலனறுவை, இறப்பு 01.06.1990,
10).கரீம் முஸ்தபா ஓட்டமாவடி, இறப்பு 12.06.1990,
11). தௌபீக் இஸ்மாயில் ஓட்டமாவடி, இறப்பு 12.06.1990,
12). ஜிவ்றி முகம்மது இலியாஸ் 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை,இறப்பு 13.06.1990,
13). அகமட்ஓட்டமாவடி, இறப்பு 14.06.1990,
14). ஜலீம் முகமது இஸ்மாயில் மன்சூர் ஏறாவூர் இறப்பு 01.09.1990,
15). மஜீத் முகமது இஸ்காக் கூப்சேக்அலி மீராவோடை, இறப்பு 18.06.1990,
16).லெப்பைதம்பி செய்னூர் ஓட்டமாவடி, வாழைச்சேனை, இறப்பு 19.06.1990,
17) அகமதுலெப்பை முகமது கனீபா அக்ரைப்பற்று, இறப்பு 07.01.1987,
18). யுனைதீன் அட்டாளைச்சேன இறப்பு 26.06.1988,
19). சம்சுதீன் அபுல்கசன் அக்கரைப்பற்று,இறப்பு 27.10.1988,
20) சம்சுதீன் நசீர் ஒலுவில் இறப்பு17.02.1989,
21).நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பைஅககரைப்பற்று, இறப்பு 22.06.1989,
22). ஜபார் ஜாபீர் அட்டாளைச்சேனை, இறப்பு 06.12.1989,
23)மீராசாகிபு காலிதீன் சாய்ந்தமருது, அம்பாறை இறப்பு 06.12.1989.
24). அகமட் லெப்பை செப்லாதீன் : வேப்பச்சேனை, அம்பாறை இறப்பு 25.05.1990,
25). முகமது ரபீக் பொத்துவில்,இறப்பு 15.06.1990,
26).மாப்பிள்ளை லெப்பை அல்வின் : இறக்காமம்,இறப்பு 16.06.1990,
27)..அபுசாலி புகாரி அக்கரைப்பற்று, இறப்பு 15.07.1990,
28). முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை. இறப்பபு 28.04.1987,
29) ஆதம்பாவா ஹசன் : மூதூர், திருகோணமலை. இறப்பு 05.11.1989,
30).நைனா முகைதீன் நியாஸ் : நிலாவெளி, திருகோணமலை.இறப்பு 06.02.1990,
31). ஆப்தீன் முகமட் யூசுப் குச்சவெளி, திருகோணமலை இறப்பு 15.06.1990,
32).நியாஸ் மூதூர், இறப்பு 17.06.1990,
33). கச்சுமுகமது அபுல்கசன் 1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. இறப்பு 14.06.1990,
34).கனீபா முகமதுராசீக் திருகோணமலை. இறப்பு 22.06.1990,
35).அப்துல நசார் புடவைக்கட்டு, திருகோணமலை. இறப்பு 27.07.1990,
36). அப்துல்காதர் சாதிக்யாழ்ப்பாணம். இறப்பு 25.08.1986,
37).ரகீம் யாழ்ப்பாணம் இறப்பு08.05.1986,
38) ரகுமான் யாழப்பாணம் 08.05.1986,
39)சலீம் யாழ்ப்பாணம் இறப்பு 03.07.1987,
40)கமால் மட்டக்களப்பு இளப்பு 07.06.1990 ,
41).அப்துல்காதர் சம்சி காத்தான்குடி இறப்பு 13.06.1990,
42).அன்வர் அட்டாளச்சேனை இறப்பு 15.06.1990,
43).கபீர்அக்கரைப்பற்று, அம்பாறை இறப்பு 15.06.1990,
44). அப்துல்மானாப்முகம்மதுநசீம் கிண்ணியா இறப்பு 25;07.1986,
45 )மொகமட் மூதூர், திருகோணமலை இறப்பு 25.07.1986
முஷ்லிம் மாவீரர்களின் பெயர்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டது.!
1985, தொடக்கம் 1990, வரை மட்டுமே முஷ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்..!
தந்தை செல்வா தமிழர்களின் விடுதலை போராட்டம் என எந்த இடத்திலும் ஒருபோதும் கூறவில்லை, தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலை என்பதே அவரின் கொள்கையாக இருந்தது. முஷ்லிம்மக்களையும் இணைத்து இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியூடாக சகல அரசியல் செயல்பாடுகள், தேர்தல் பிரதிநித்துவம். கட்சி உறுப்புரிமை,அகிம்சை போராட்டங்களில் எல்லாம் முன்எடுத்தார்..! ஆனால் சந்தர்பவாதம் அவர்களை விட்டுவைக்கவில்லை என்பது வேறு கதை!
1970,ல் பொதுத்தேர்தலில் ஆட்சியமைத்த ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் தமிழர்களில் இருந்து முஷ்லிம் மக்களை பிரிக்கும் பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டு கல்வி அமைச்சராக பதியூதீன் மொகமட்டை நியமித்து பல்கலைக்கழக தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தி வேலைவாய்புகளி்லும் தமிழ் இளைஞர்களை புறக்கணித்து முஷ்லிம் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிய வரலாறுகள் உண்டு.!
இருந்தும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலத்தில் விடுதலைப்புலிகள் பல முஷ்லிம் இளைஞர்களை தமது இயக்கத்தில் போராளியாக இணைத்து தமிழ்பேசும் மக்களின் போராட்டம் என்பதை உறுதிப்படுத்தினர்..!
1989,ஜனவரி02, ல் ஜனாதிபதியாக தெரிவான ஆர் .பிரமதாசா ஆட்சியில் 1990,ல் தமிழ் முஷ்லிம் மக்களிடையே பிரித்தாளும் சூட்சியாக முஷ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையினராக உள்வாங்கி இராணுவத்துடன் இணைந்து தமிழினப்படுகொலைகள் அரங்கேறின..!
1990,க்கு பின்னர் தமிழ் முஷ்லிம் பிழவுகள் தொடர்ந்தன ஆர் பிரமதாசாவின் பிரித்தாழும் தந்திரம் அவர் எதிர்பார்த்தபடி வெற்றியளித்தது என்பதே உண்மை..
இதனால் ஏற்பட்ட சூழ்ச்சியை முறியடிக்கவே யாழ்ப்பாணத்தில் இருந்து முஷ்லிம் மக்களை பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் என்பதே வரலாறு
அதே பிரமதாசா 1993, மே,01, ம் திகதி தற்கொலைத்தாக்குதலால் மரணமானார்!
அதன் பின்னர் முஷ்லிம் இளைஞர்கள் எவரும் 1990, தொடக்கம் 2009, வரை விடுதலைப்புலிகளில் இணைத்துக்கொள்ளப்பட வில்லை .