நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று ஆரம்பம்!



10 ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று (25-11-2024) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த செயலமர்வு நடைபெறவுள்ளன.

இங்கு நாடாளுமன்ற மரபுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இது போன்ற செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை