ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை: திணைக்களம் விசேட அறிவிப்பு!




நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவித்துள்ளார்.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்
கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்
பரீட்சைகள் ஆணையாளர்
மேலும், குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 


மேலும்,  சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.எம.சிப்லி மற்றும் செயலாளர் யு.உபைதுல்லா ஆகியோர் இணைந்து குறித்த கோரிக்கை கடிதத்தை வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடம் இன்று (26.11.2024) கையளித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுளளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதுடன், அவர்களும் மழைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதனால் ஏனைய மாவட்டங்களில் விடுமுறை வழங்கியது போன்று வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
புதியது பழையவை