இலங்கைத் தமிழரசுக் கட்சியில் - தேசியபட்டியலில் ரஞ்சனியை ஏமாற்றிய சாணக்கியன்!




இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக றஞ்சினி கனகராசா தெரிவு செய்யப்படுவதற்கு சாணக்கியன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக றஞ்சினி கனகராசா உள்ளார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட றஞ்சினி கனகராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் தெரிவுக் குழுவிலும் பங்குபற்றியிருந்தார்.


இந்நிலையில் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பெண்கள் தெரிவு செய்யப்படுவதற்கு சாணக்கியன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை  தேர்தல் காலங்களில் வாக்கு பெறுவதற்காக , தேசியப்பட்டியலில் உள்வாங்க உத்தரவாதம் அளித்துவிட்டு றஞ்சினியை பயன்படுத்திவிட்டு , நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் றஞ்சினியை உள்ளெடுப்பதற்கு சாணக்கியன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை மட்டக்களப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை