மின்சாரம் தாக்கி உயிரிழந்த மிகப்பெரிய தந்தங்களை கொண்ட காட்டு யானை!



கலா ​​வேவா சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மிகப்பெரிய ஜோடி தந்தங்களைக் கொண்ட தீகதந்து-1 என்ற காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

அனுராதபுரம், அடியாகல கிகுருவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் முன் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடியாகலை வனஜீவராசிகள் அலுவலகமும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை