ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய்!



நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது என தோழர் பாலன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான்.


சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது குறித்த தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்தார்.

இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது என முகநூலில் தோழர் பாலன் என்பவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
புதியது பழையவை