ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்!



கொழும்பு, ராஜகிரிய, மடவெலிகட வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

குறித்த பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கையினை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதியது பழையவை