வைத்தியரின் மனைவிமீது கத்திக்குத்து!



திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி இன்று (05-11-2024) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனவந்தரி வைத்தியசாலை உரிமையாளரின் மனைவியான ஏஞ்சலி சுமேத்ரா (63வயது) எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது வெளிநாட்டில் இருந்து இன்று (05) அதிகாலை வருகை தந்து வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள  மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றபோது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில் தன்வந்திரி வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியர் கணேகபாகுவின்  சகோதரரான 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை