மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒரு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (12-12-2024) மீன்பிடி நடவடிக்கைக்காக படகு மூலம் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களும் மீண்டும் இன்று (13-12-2024) காலை 6.00 மணியளவில் கரைக்கு திரும்பும் போது முகத்துவாரப் பகுதியில் இவ்வாறு படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றவரை தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்ட நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திராய்மடுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபரே பின்னார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரனையினை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை